வரலாற்றுக் குறிப்புகள்
1838 |
ஹாட்லிக் கல்லூரியானது ஆங்கில, தமிழ் அகராதிகளை தொடுத்த வரும் விபிலிய நூலை ஆங்கிலத்தில் இருந்து தமிழிற்கு மொழி பெயர்த்த புலமை வாய்ந்த கல்வியலாளருமான வண கலாநிதி பீற்றர் சேிவல் அவர்களால் வெஸ்லியன் மிசன் மத்திய பாடசாலைஎன்ற பெயருடன் நிறுவப்பட்டது. |
1848 | பாடசாலையின் சிறந்த வேலைக்காக மத்திய பாடசாலை ஆணைக்குழு குறிப்பிட்ட வெகுமதியை சிபார்சு செய்தது. |
1860 | சில பிரச்சினைகளால் வருடத்தின் குறிப்பிட்ட காலத்தில் பாடசாலை மூடப்பட்டிருந்தது. |
1861 | கலைப்பட்டதாரியாகிய திரு D.P.நைல்ஸ் பாடசாலையை மீண்டும் ஒருஉறுதியான அடித்தளத்துடன் ஆரம்பித்து அதிபராக பதவியேற்றார். |
1874 | பாடசாலைகளின் உபமேற்பார்வையாளரான திரு W.M.M.D அல்வில்,தரம் 4 தொடக்கம் 6 வரையான மாணவர்களின் அடைவுமட்ட புள்ளிகள் குடாநாட்டின் திறமை வாய்ந்த பாடசாலைகளை விட அதிகம் எனக்குறிப்பிட்டார். |
1875 | பாடசாலை தற்போதைய இடத்திற்கு இடம் மாற்றப்பட்டது. பழைய இடத்தில் பெண்கள் தங்குமிட விடுதி கொண்ட பாடசாலையும், தற்போதைய மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலையும் வண W.P.வின்ஸ்ரன் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. |
1878 | வண நப் என்பவரின் கீழ் திரு J.C.T செரட் தலைமை ஆசிரியரானார். 7ஆம் தரம் வரையான வகுப்பினையும் கொண்டிருந்தது.அத்துடன் பாடசாலையில் ஒரு பெரிய மண்டபமும் இரு வகுப்பறைகளும் காணப்பட்டன. அக்காலத்தில் அவர் மிகப் பிரபலமானவராக திகழ்ந்ததால் கல்லூரியானது செரட்டின் பாடசாலை என அறியப்பட்டது. |
1896 | பாடசாலை தரமுயர்த்தப்பட்டது. கல்கத்தா பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கு கல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைந்த யாழ் (மெதடிஸ்த) மத்திய கல்லூரியின் ஊடாக தோற்ற அனுமதி வழங்கப்பட்டது. |
1906 | திரு. செரட் தலைமையாசிரியராக இருந்த வேளையில் கலைப்பட்டதாரி ஆகிய திரு S.Aபோல்பிள்ளை அதிபராக நியமிக்கப்பட்டார்.திரு போல்பிள்ளை காலமாகிய பின்பு திரு கணபதிபிள்ளை அதிபரானார். |
1912 | கலைப்பட்டதாரியாகிய திரு E.S ஏபிரகாம் அதிபரானார். பாடசாலை கிறிஸ்த்து தேவாலய பாடசாலை என அழைக்கப்பட்டது. |
1915 | கலைப்பட்டதாரியாகிய திரு E.S ஏபிரகாம் சாவகச்சேரியிலுள்ள அவரது இல்லத்திற்கு அருகிலுள்ள டிறிபேக் கல்லூரியில் அதிபரானார். திரு C.P தாமோதரம் அதிபராகி கல்லூரியைப் பொறுப்பேற்றார். |
1916 | கிழக்குப்பகுதிக்குரிய மெதடிஸ்த மிசனின் செயலாளரான வண மார்சல் ஹாட்லி பாடசாலைக்கு விஜயம் செய்தார். அப்போது விஞ்ஞான ஆய்வுகூடத்திற்கான அடிக்கல் அவரால் நாட்டப்பட்டது. பாடசாலை ஹாட்லிக் கல்லூரி என பெயர்மாற்றம் செய்யப்பட்டது. |
1917 | இரசாயனவியல் ஆய்வுகூடம் பூர்த்தி செய்யப்பட்டதோடு ஆறு வகுப்பறைகளும் கட்டப்பட்டன. |
1919 | மாணவர்கள் கேம்பிறிஜ் சிரேஸ்ட பரீட்சைக்கு தோற்றினார். |
1920 | விளையாட்டு மைதானம் வழங்கப்பட்டது மற்றும் பல வகுப்பறைகள் கட்டப்பட்டன. குறிப்பாக கேம்பிறிஜ் பரீட்சையில் நல்ல அடைவுமட்டங்கள் பெறப்பட்டன ஹாட்லியர்கள் பல்கலைகழக கல்லூரிகளான புலமைப்பரிசில்ளை வென்றனர். |
1923 | ஆண்கள் சாரணர் இயக்கம் உருவாக்கபட்டது. ஹாட்லி வடக்கில் பாடசாலைகளுக்கிடையிலான காற்பந்தாட்ட போட்டியில் வெற்றியாளராக திகழ்ந்தது. |
1930 | விடுதி கட்டப்பட்டது. கல்லூரியில் துடுப்பாட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. |
1933 | ஹாட்லிக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் (OBA) கொழும்பு கிளை நிறுவப்பட்டது. |
1936 | திரு C.J எலிசர் பல்கலைகழக புலமைப் பரிசிலை வென்றார். |
1938 | பழைய மாணவர் சங்கத்தின் (OBA) கொழும்பு கிளை நிறுவப்பட்டது. |
1943 | கலைப்பட்டதாரியாகிய திரு. K.பூரணம்பிள்ளை அதிபரானார். |
1944 | கூட்டுறவு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. |
1945 | கூட்டுறவு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. |
1947 | வரலாற்றுக் கழகம் ஆரம்பிக்கப்பட்டது |
1948 | நாடக கழகம் ஆரம்பிக்கப்பட்டு தமிழ் மற்றும் ஆங்கில நாடகங்கள் மேடையேற்றப்பட்டன. புகைப்பட மற்றும் திரைப்பட கழகங்கள் உருவாக்கப்பட்டன. |
1950 | மாணவனாகிய S சற்குணரத்தினம் அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட S.S.C (விஞ்ஞான பாடசாலை சான்றிதழ் ) பரீட்சையில் முதலி்டம் பெற்றதற்காக கலாநிதி ராஜ்ஹோவலி தாறன் நினைவுபஞ்சிலை பெற்றுக்கொண்டார். சிங்கள மொழி கற்பிக்கப்பட ஆரம்பிக்கப்பட்டது. |
1952 | பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட விஞ்ஞான புலமைபரிசிலை மாணவனான H.துரைராஜ் மட்டும் பெறு்றுக்கொண்டார். |
1953 | நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. |
1957 | விஞ்ஞான மன்றம் ஆரம்பிக்கப்பட்டது. தரம் 11 மற்றும் 12க்கான இலக்கிய மன்றம் உருவாக்கப்பட்டது. வருடமுடிவு இராப்போசனம் ஆரம்பிக்கப்பட்டது. |
1961/1962 | G.Balasingam, a student, was adjudged as the best cricketer of the North. He won the Ceylon Schools Best All-rounder prize and was made the vice-captain of the Ceylon Schools Cricket Team which visited Australia.
2nd and 3rd XI Cricket Teams were started. Hindu Students Union was inaugurated. 2nd and 3rd XI Cricket Teams were started. Hindu Students Union was inaugurated. |
1963 | Hartley was adjudged as the Best Cricket Team of the North. |
1964 | M.Nadarajasundaram adjudged the best cricketer. |
1967 | நான்கு ஹாட்லியர் யாழ் இணைந்த துடுப்பாட்ட அணியில் இடம்பெற்றார்கள். திரு. K.பூரணம்பிள்ளை அவர்கள் திரு ஜோன்ஸ் கல்லூரிக்கு மாற்றம் பெற்றும் செல்ல திரு S.இரட்சணசபாபதி அவர்கள் அதிபராக பொறுப்பேற்றார். |
1968 | 21 மாணவர்கள் பல்கலைக்கழக பொறியியல் பீடத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார்கள். |
1969 | நான்கு ஹாட்லி மாணவர்கள் யாழ் இணைந்த துடுப்பாட்ட அணியில் இடம்பெற்றார்கள். இரண்டு மாணவர்கள் இரண்டாவது பதினொருவர் அணிக்கு தெரிவு செய்யப்பட்டார்கள் |
1970 | ஆறு ஹாட்லி மாணவர்கள் யாழ் இணைந்த துடுப்பாட்ட முதலாம் இட பதினொருவர் அணியில் இடம்பெற்றார்கள். இல் அணியின் தலைவராக எமது பாடசாலை மாணவர் இருந்தார் |
1971 |
திரு S.இரட்சணசபாபதி அவர்கள் ஓய்வு பெற்றும் சென்றார். இளவிஞ்ஞானமானி பட்டம் பெற்ற திரு C.இராஜதுரை அடுத்த அதிபராகப் பொறுப்பேற்றார். |
1972 |
M.மனோகரதாஸ் அவுஸ்ரேலிய அணிக்கு எதிராக விளையாடினார். அவர் அகில இலங்கை இணைந்த உதைபந்தாட்ட அணிக்காகவும் தெரிவு செய்யயப்பட்டார். |
1973 |
திரு C.இராஜதுரை பிரதம கல்வி அதிகாரியாகத் தரமுர்த்தப்பட்ட போது இளவிஞ்ஞானமானியான திரு P. ஏகாம்பரம் பாடசாலை அதிபராக நியமிக்கப்பட்டார். |
1975 |
கலைப்பட்டதாரியான திரு.W.N.S சாமுவேல் அவர்கள் திரு P. ஏகாம்பரம் அவர்கள் சாம்பியன் அரச நியமனத்தின் நிமித்தம் சென்றமையால் அதிபரானார். |
1976 | M. வசந்தநாதன் வடபகுதி துடுப்பாட்ட அணியில் எமது பாடசாலையை பிரதிநிதித்துவப்படுத்தினார். |
1978 | M.புவனேந்திரகுமார் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் நான்கு விசேட திறமைச் சித்திபெற்றார். |
1979 | ஹாட்லியின் நான்கு மாணவர்கள் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் நான்கு பாடங்களிலும் விசேட திறமைச்சித்திகளைப்பெற்றார்கள். |
1980 | தாமோதரம் ஞாபகார்த்த ஆய்வுகூடம் பூரணப்படுத்தப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. A. சந்திரகுமார் க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் நான்கு விசேட திறமைச் சித்திபெற்றார். 14 மாணவர்கள் பொறியியல் பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருந்தார்கள் |
1981 |
K.இராமகிருஷ்ணன் க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் நான்கு பாடங்களிலும் 360 புள்ளிகளைப் பெற்று மிகச்சிறந்த பெறுபேற்றைப் பெற்றார். மேலும் 03 மாணவர்கள் நான்கு பாடங்களிலும் விசேட திறமைச் சிதிதிகளைப் பெற்றார்கள். 14 மாணவர்கள் பொறியியல் பீடத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார்கள். |
1982 | மூன்று மாணவர்கள் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் விசேட திறமைச் சித்திகளைப் பெற்றார்கள் இவர்களில் இருவர் இரட்டையர்கள். இத்தகைய பெறுபேற்றினைப் ஹாட்லிக்கல்லூரி அமைந்திருந்தது. T.குகராஜா அதி உயர்ந்த சராசரிப்புள்ளிகளைத் தேசிய மட்டத்தில் பெற்றார். V.சிலராமன் கொழும்பு பல்கலைக் கழகத்தில் மட்டத்தில் செத்திர சிகிச்சைக்கான “றொக்வூட் கோல்ட் மெடல்” வழங்கப்பட்ட தங்க விருதினைப் பெற்றார். |
1983 | பூரணம்பிள்ளை மண்டபம் திறந்து வைக்கப்பட்டது. அதிபர் திரு W.N.S.சாமுவேல் அவர்களால் இலண்டனில் பழைய மாணவர் சங்க கிளை ஒன்று திறந்து வைக்கப்பட்டது. |
1984 | பாடசாலையின் நுாலகம் 6690 புத்தகங்களுடனும் மற்றும் சில வகுப்பறைகளும் தீக்கிரையாக்கப்பட்டன. |
1985 |
பாடசாலை 3 கி.மீ தூரத்தில்அமைந்துள்ள புற்றளை என்ற கிராமத்திற்கு இடம் மாற்றப்பட்டது. திரு W.N.S.சாமுவேல் அவர்கள் ஓய்வு பெற்றுச் செல்ல கலைப்பட்டதாரியபன திரு P. பாலசிங்கம் அதிபராக நியமிக்கப்பட்டனர். |
1986 |
ராதன் மார்கண்டன் சுப்ரமணியம் க. பொ.த உயர்தரப் பரீட்சையில் 3 விசேட திறமைச்சித்திகளையும், திறமைச்சித்தியினையும் பெற்று அவுஸ்ரேலியாவின் மருத்துவ மேற்படிப்பிற்கான புலமைப் பரிசிலைப் பெற்றார். |
1987 | 14 பாடசாலைகளைக் கொண்ட கொத்தணிப்பாடசாலைகளின் தலைமைப்பாடசாலையாக ஹாட்லி உருவாக்கப்பட்டதோடு அதனுடைய கொத்தணி அதிபராக திரு P. பாலசிங்கம் அவர்கள் நியமிக்கப்பட்டார். கல்வி அமசை்சரான கௌரவ ரணில் விக்கிரமசிங்க 31ம் திகதி ஆவணி மாதம் வருகை தந்தார். S. சபேசன் க. பொ.த உயர்தரப் பரீட்சையில் 3 விசேட திறமைச்சித்திகளையும், திறமைச்சித்தியினையும் பெற்று அவுஸ்ரேலியாவின் மருத்துவ மேற்படிப்பிற்கான புலமைப் பரிசிலைப் பெற்றார். B. கண்ணன் க. பொ.த உயர்தரப் பரீட்சையில் 4 விசேட திறமைச்சித்திகளையும், திறமைச்சித்தியினையும் பெற்று மேற்படிப்பிற்காக அவுஸ்ரேலியா சென்றார். 17 மாணவர்கள் பொறியியல் பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருந்தார்கள். |
1988 | 14 students obtained Distinctions in all 8 subjects and 13 obtained Distinctions in 7 subjects at the G.C.E (O/L) Examination.
N.Nithithiandan got 4A in the Commerce in G.C.E A/L and won scholarship to Australia. 19 students went to Engineering faculty. |
1989 | Buildings handed back by the Indian Peace Keeping Force (IPKF) to the Principal. Issue of a stamp and a First Day cover to commemorate the 150th Anniversary of the college took place.
29 students were selected for Engineering and 10 were selected for Medicine. S.Poopalan got 3A B and won scholarship to Australia to do Medicine. P.Varakunan got 4A and won scholarship to Australia to do Engineering. |
1990 | Entire school was shifted to the old site. K.Ananthakumar tops the G.C.E (A/L) Exam (1989) securing 366 marks. G.C.E (O/L) and (A/L) Exams were not held. |
1991 | Special G.C.E (A/L) Exam was held in April. P.Anpalagan and B..Manivannan obtained 4A and were felicitated by the Hon. President. |
1992 | 25 Students went to Engineering Faculty.
T.Thayaparan got 4A and won scholarship to Australia to do Engineering. |
1993 | Mr.P.Balasingam retired and Mr.K.Nadarajah succeeded him.
J.Jegachelvan obtained 4A in the A/L and secured the 1st place in district and 6th in the island in Commerce stream. |
1994 | Interact Club was formed at the College. G.C.E (A/L) Union Social held after a lapse of 12 years.
G.C.E (A/L) commerce Union published the Magazine “Vanikaviyalalan”. 22 Students went to Engineering Faculty. R.Muhundan got 4A in G.C.E A.L and secured the 2nd in National Level in Mathematics and won scholarship to Australia to do Engineering. |
1995 | துரைராஜா ஞாபகார்த்த கட்டடத்தொகுதி கட்டம் I திறந்து வைக்கப்பட்டது |
1997 | திரு P.வேணுகோபால வாணிதாசன் பாடசாலை அதிபரால் பொறுப்பேற்றுக்கொண்டார். |
1999 | திரு P வேணுகோபால வாணிதாசன் வலயக்கல்விப்பணிப்பாளரராக பதவி உயர்வு பெற்று சென்றார். அதன் பின்பு திரு N.குணசீலன் அவர்கள் நிர்வாக கடமைகளை செயற்படுத்தினார்.செல்வன் S. சிவோத்தமன், B.பிரதீபன், P. காந்தன், S.ரவிசங்கர் ஆகிய க.பொ.த உயர்தர மாணவர்கள் பருத்தித்துறை கடற்கரைக்குக் கல்விச்சுற்றுலா சென்ற வேளையில் உயிர்நீத்தனர். |
2000 | திரு M.சிறிபதி பாடசாலை அதிபராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். செயற்பாட்டு அறை கட்டப்பட்டது. பாடசாலையின் எல்லைகள் வரையறுக்கப்பட்டது. |
2001 |
துரைராஜா கட்டடத் தொகுதி கட்டம் II முடிவடைந்து கட்டடம் திறந்து வைக்கப்பட்டது. |
2002 | உலகளாவிய ஹாட்லி நிதியம் ஆரம்பிக்கப்பட்டது |
2003 |
திரு M.சிறிபதி அவர்கள் உதவிக்கல்விப் பணிப்பாளராக வடமராட்சி கல்வி வலயத்திற்கு மாற்றலாகிச் சென்றார். பின்னர் திரு V. பத்மநாதன் பாடசாலை அதிபராககட கடமைபேற்றார். SEMP செயற்றிட்டத்தின் கீழ் கணனி அறை ஒன்று கட்டப்பட்டது. |
2005 |
திரு V. பத்மநாதன், திரு N.குணசீலன் ஆகிய இருவரும் ஓய்வு பெற்றார்கள். அதனால் MS.M.ராஜேஸ்கந்தன் (சிரேஸ்ட பகுதித்தலைவர்) அவர்கள் நிர்வாகத்தினை இரண்டு மாதகாலங்களிற்கு நடாத்தினார். NSW- கிளையால் ஒரு கணனி ஆய்வுகூடம் அன்பளிப்புச் செய்யப்பட்டது. GIZ-செயற்றிட்டத்தினோடு நூலகம், க.பொ. த சாதரண கட்டடங்களின் வேலைகள் பூர்த்தியாக்கபட்டது. திரு N.தெய்நே்திரராஜா பாடசாலை அதிபராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். |
2006 | வெளிக்களக்கற்கை நிலையம் ஒன்ற கல்வி அமைச்சால் கட்டப்பட்டது. |
2007 |
தேசிய மட்ட குழு இசை தமிழ்த்தினப் போட்டியில் மாணவர்கள் பங்குபற்றி 1ம் இடத்தினைப் பெற்றுக்கொண்டனார். க.பொ.த உயர்தர பரீட்சையில் செல்வன் விமலநாதன் ரஜீவன் தேசிய நிலையில் கணிதப்பிரிவில் 3ம் இடம் பெற்றுக்கொண்டார். தேசியமட்ட தட்டெறிதல் போட்டியில் 17 வயதுப்பிரிவில் 47.29M துாரம் வீசி செல்வன். வடிவேஸ்வரன் ஹரிகரன் 2ம் இடத்தைப் பெற்றுக்கொண்டார். L-தொகுதிகட்டம் II, புதிய அதிபர் காரியாலயம், ஆசிரியர் ஓய்வறை என்பன SDC ஆல் கட்டப்பட்டது. திரு M. திருநீலகண்டனின் அனுசரனையுடன் தரம் 10,11 மாணவர்களிற்கான கேத்திரகணிதப்போடடி ஆரம்பிக்கப்பட்டது. |
2008 |
தேசியமட்ட தட்டெறிதல் போட்டியில் 41.6M தூரம் வீசி வடிவேஸ்வரன் ஹரிகரன் வர்ண விருதினைப் பெற்றார். எமது பாடசாலையின் பழையமாணவனும், இந்நாள் ஆசிரியருமான திரு T.ஜெயதீபன் தேசியமட்ட சித்திரப் போட்டியில் முதலாமிடத்தைப் பெற்றுக்கொண்டார். |
2009 |
A.C ஜோன் நிராஜ் க.பொ.த உயர்தர கணிதப்பிரிவில் தேசிய நிலையில் 2ம் இடத்தைப் பெற்றார். இவர் ஜனாதிபதியால் கௌரவிக்கப்பட்டார். இவர்தாய்வானில் இடம்பெற்ற ஆசியமட்ட கணித ஒலிம்பியாட் போட்டியில் பங்குபற்றியுள்ளார். 14 மாணவர்கள் பொறியியற் பீடத்திற்கும்,4 மாணவர்கள் மருத்துவ பீடத்திற்கும் தெிவாகினார். 19 வயதிற்குட்பட்ட தேசியமட்ட தட்டெறிதல் போட்டியில் 42.67M தூரம் வீசி வடிஸே்வரன் ஹரிகரன் தங்கப்பதக்கத்தினையும் வர்ணவிருதினையும் பெற்றுக்கொண்டார். தமிழ்மொழிதினம் குழு இசை மற்றும் நாட்டுப்புற இசை ஆகிய போட்டிகளில் தேசிய மட்டத்தில் 1ம் இடம்பெற்றனர். 1999ம் ஆண்டு கல்விச்சுற்றுலாவின் போது உயிர் நீத்த மாணவர்களின் ஞாபகார்த்தமாக க.பொ.த உயர்தர 2000ம் ஆண்டு மாணவர்களினால் திறமையான மாணவர்களிற்கு புலமைப்பரிசில்களும், விருதுகளும் அவர்களின் ஞாபகார்த்தமாக வழங்கப்பட்டது. அன்றைய நாளில் ஒரு இரத்ததான முகாம் இடம்பெற்றது. தேசிய ரீதியில் இது ஒரு முக்கிய பதிவையும் ஏற்படுத்தியது. |
2010 |
க.பொ.த உயர்தர உயிரியற்பிரிவைச் சேர்ந்த பாலகோபாலன் கோகுலன் தேசிய நிலையில் 3ம் இடத்தைப் பெற்றுக்கொண்டார். 21 வயதிற்குட்பட்ட தேசியமட்ட தட்டெறிதல் போட்டியில் வடிவேஸ்வரன் ஹரிகரன் தங்கப்பதக்கத்தினையும், வர்ணவிருதினையும் பெற்றுக்கொண்டார். மேலும் 19 வயதிற்குட்பட்ட கோலூன்றிப்பாய்தல் நிகழ்விலே துரைலிங்கம் பாலகுமார் 3.6M உயரத்தைத் தாண்டி தங்கப்பதக்கத்தையும், வர்ணவிருதையும் பெற்றுக்கொண்டார். 15 வயதிற்குட்பட்ட சதுரங்க சுற்றுப்போட்டியில் ஜெயராஜா கபிலநாத் மீயுயர் பரிசைப் பெற்றுக்கொண்டார். மாணவர் படையணி சாரஜன் செல்வன் N.தினேஸ் தேசியமட்ட மாணவர் படையணி செயற்றிட்டத்தின் மூலம் கௌரவ ஜனாதிபதி அவர்களால் பாராட்டப்பட்டார். 19 வயதிற்குட்பட்ட தேசியமட்ட கோலூன்றிப்பாய்தல் நிகழ்ச்சியில் துரைலிங்கம் பாலகுமார் 3.6M உயரத்தை தாண்டி வெள்ளிப்பதக்கத்தைப் பெற்றுக்கொண்டார். தேசியமட்ட கணித ஒலிம்யாட்டில் வெற்றிப்பெற்று பாலி- இந்தோனேசியாவில் இடம்பெற்ற ஆசியமட்ட கணிதபோடடியில்கனகசபை மஹிந்தன் சிறப்புத் தேர்ச்சியை பெற்றுக்கொண்டார். தேசிய போசாக்கு வார கட்டுரைப்போட்டியில் வாமதேவன் ஜெயபிரசன்னா 1ம் இடத்தைப் பெற்றுக் கொண்டார். க.பொ.த சாதாரண பரீட்சையில் தோற்றிய தனபாலசிங்கம் கோகுலன் ஆங்கில மொழிமூலத்தில் மாவட்ட 1ம் இடத்தைப் பெற்றுக்கொண்டார். |
2011 |
க.பொ.த சாதாரண 2011 பெறுறே்றின் அடிப்படையில் நாடாளவிய ரீதியாக கல்வித்திணைகளத்தினால் தெரிவு செய்யப்பட்ட சிறந்த 3 தமிழ்பாடசாலைகளில் யாஃஹாட்லி கல்லூரியும் ஒன்றாகும். புதிய மாணவர்களிற்கான விடுதி ஒன்றை கட்டுவதற்கான பணிகள் ஜேர்மன் மற்றும் பழைய மாணவனுமான இயான் ஜி.கரன் என்பவரால் ஆரம்பிக்கப்ட்டது. UNCOR மற்றும் பெற்றோரின் பங்களிப்புடன் பாடசாலை எல்லை மதில் கட்டப்பட்டது. ஹாட்லி கல்லூரிக்கானவன்னி பழைய மாணவர் சங்கம் தெரிவு செய்யப்பட்டு ஸ்தாபிக்கப்பட்டது. HCCPA கனடா மற்றும் USA கிளையால் 40 புதிய கணனிகள் அன்பளிப்புச் செய்யப்பட்டது. மேலும் 6 பரப்பு நிலம் இந்த நிதியத்தால் கொள்வனவு செய்யப்பட்டது. |
2012 |
க.பொ.த உயர்தர கணிதப்பிரிவில் பாலகோபாலன் கபிலன் தேசிய நிலையில் 3ம் இடத்தைப் பெற்றுக்கொண்டார். க.பொ.த உயர்தர பெறுபேற்றின் அடிப்படையில் தேசிய நிலையில் கணிதப்பிரிவில் யாஃஹாட்லிக் கல்லூரி 4ம் இடத்தைப் பெற்றுக்கொண்டார். அகில இலங்கை தமிழ்தினப்போடடியின் குழு இசைப்போட்டியில் 1ம் இடத்தைப் பெற்றுக்கொண்டனார். ஆளுனர் நிதியத்தின் முலம் பாடசாலையின் உள்ளக வீதிகள் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டு பாவனைக்காக வழங்கப்பட்டது. IFRC மூலம் மலசல கூடத்தொகுதி நிர்மாணிக்கப்பட்டது. UK கிளையின் மூலமாக உணவகம் கட்டப்பட்டது. பாடசாலைக்கும் நீதிமன்றத்திற்கும் இடையிலான நிலம் SDC மற்றும் HCPPAஇன் நிதியுதவி மூலம் கொள்வனவு செய்யப்பட்டது. நிதியத்திடமிருந்து பாடசாலைக்கு 8 பரப்பு நிலம் உரிமைமாற்றம் செய்யப்பட்டது. DCBஆல் சிறிய வாகனத்தரிப்பிடம் கட்டப்பட்டது. ஹாட்லிக் கல்லூரிக்கான உத்தியோகபூர்வ வலைத்தளம் ஆரம்பிக்கப்பட்டது. உணவகத்திற்கான நிலப்பரப்பு தாய் சங்கத்திலிருந்து நிதியத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. |
2013 |
சீனாக்கூட்டுத்தாபனத்தால் கூடைப்பந்து மைதானம் கட்டப்பட்டது.மேலும் திரு M. ராஜஸ்காந்தன், பேராசிரியர் ராஜேந்திரன் மற்றும் அவர்களின் குடும்பத்தினரால் நகர்த்தக்கூடிய கூடைப்பந்து தூண் அன்பளிப்புச் செய்யப்பட்டது. EnRep மூலமாக நூலகவிரிவாக்கம்,ஒன்றகூடல் மண்டபம் நிலை II, துவிச்சக்கரவணடி நிறுத்துமிடம் என்பன கட்டப்பட்டன. கனடா,USA கிளைகளின் அனுசரனையுடன் இணைய வசதியுடனான கணனி அறையாக கணனி அறை மாற்றப்பட்டது. பாடசாலை முகாமைத்துவ (மென்பொருள்) மேம்படுத்தப்பட்டது. பாடசாலையில் CCTV கமரா கண்காணிப்பு நடைமுறை ஆரம்பமானது.HCCPA,NSW கிளையின் அனுசரனையுடன் க.பொ.த சாதாரண தோற்றி, பெறுபேற்றுக்காகக் காத்திருக்கும் மாணவர்களிற்கான இணைப்பு வகுப்பிற்கான மாதிரி செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டது. புதிதாக கொள்வனவு செய்யப்பட்ட பாடசாலைக்கும் நீதிமன்றத் தொகுதிக்கும் இடைப்பட்ட நிலத்திலே தொழினுட்ப ஆய்வுகூடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. க.பொ.த உயர்தர விஞ்ஞானப்பிரிவில் S. டினேஸ் மாவட்ட ரீதியில் 1ம் இடத்தையும்,தேசிய ரீதியில 6ம் இடத்தையும் பெற்றுக்கொண்டார். கல்லூரியின் 175 வது ஆண்டு நிறைவு விழா 4 நாட்கள் இடம்பெற்றது.கண்காட்சி, சுற்றுப்போட்டிகள் மற்றும் சஞ்சிகை வெளியீடு என்பன ஒழுங்கு செய்யப்பட்டு இடம்பெற்றது. 175 வது ஆண்டு நிறைவையொடடி ஞாபகார்த்த முத்திரை ஒன்று வெளியிட்டு வைக்கப்பட்டது. புதிதாகக் கட்டப்பட்ட உணவகம் திறந்து வைக்கப்பட்டது. தேசிய மட்ட தமிழ்த்தினம் குழு இசைப் போட்டியில் (Junior)1ம் இடம்பெற்றுக்கொண்டார். தேசிய மட்ட தமிழ்தினம் போட்டியில் தரம்12 சேர்ந்த S. நிதர்சன் தனி இசைப்போட்டியில் 1ம் இடம் பெற்றார். NSW கிளை முலம் 10 புதிய கணனிகள் அன்பளிப்பு செய்யப்பட்டது. கொடிமேடை அமைப்பதற்கான அத்திவாரம் இடப்பட்டது. |
2014 |
செனரர் ஹட்பேர்க் ஜேர்மனி, திரு இயான் கரன் அவர்களாலும் அவரது பாரியார் பாபரா அவர்களாலும் இயான் கரன் விடுதி திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில்வடமாகாண முதலமைச்சர் திரு .C.விக்னேஸ்வரன் சிறு முயற்சியாளர்கள் மற்றும் குடிசைக்கைத்தொழில் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுனர் மேஜர் ஜென்ரல் G.Aசந்திரசிறி , ஜேர்மன் தூதுவர் கௌரவ Dr. ஜேர்கன் மோஹாட் மற்றும்அவரது பாரியார் , வடமாகாண கல்வி அமைச்சர் திரு N.தெய்வேந்திரராஜா அவர்கள் பிரசன்னமாயிருந்தார். கொடிமேடை திறந்து வைக்கப்பட்டது. அதிபர் திரு N.தெய்வேந்திரராஜா அவர்கள் கல்வி அமைச்சின் உதவி செயலாளராகப் பதவி உயர்வு பெற்றுச்சென்றமையால் பிரதி அதிபர் திரு K. அருளானந்தம் அவர்கள் நிர்வாகக் |
2015 | The balance work of the auditorium has been completed and declared open by the Hon Minister of Education, Northern Province and the Past Pupil of the College Mr.T.Kurukularasa.
An external path, a flight of steps has been built to Pooranampillai block. The school canteen which was already built was furnished with antiques. Water supply system was provided to the school by the Water supply board. The newly built Iyan Karan Hostel has been started functioning with 19 students. The Prime Minister Hon.Ranil Wickramasinghe paid an official visit to the school on 27th March and delivered a speech. The Technology Lab was declared open by the Hon. State Minister of Education Velusamy Rathakrishnan. Balachandran Ananth won the Silver Medal in Discus Throw in Junior National Athletic Championship in Under 16. P.Vishnu won the 3rd Place in National level in All island School Boxing Tournament. S.Jivanth won the 1st place in National Level in Boxing 49-52 kg in 17-18 age group in Sri Lanka School Boxing Association. S.Kiritharan won the 1st place in National Level in Boxing 80 kg in 15-16 age group in Sri Lanka School Boxing Association. P.Vishnuwan the 3rd place in National Level in Boxing52-54 kg in 15-16 age group in Sri Lanka Boxing Association. |
2016 | The fourth volume of the Magazine “Thedal” was launched by the Science Union.
A Bus was donated by the Hon. Prime Minister Ranil Wickramasinghe in his residence at Temple Trees. nergy Club Innovation Competitions in Grade 6-9 group in National level. The foundation stone was laid for both Principal’s Quarters and Classroom buildings. Ian kiru Karan, an old boy and the sponsor of the College Hostel, visited the school on the 3rd November 2016. R.O plant (A water purifying machine) has been fixed to the College which was funded by Hon.Ian Karan, during his visit to the college. V.Sanchith won the 1st Place in Individual Song in Division IV in National Level Tamil Day competitions. A Group Song - Division I secured the 1st Place in National Level Tamil Day competitions. U.Lathussoban won the 1st place in Innovation in the E S.Jathusan was selected to participate in the International level from the National Level Maths Olympiard Competition in Category III. R.Rajinthan from Grade 9 was selected from the Provincial level in Maths Quiz and participated in the national level representing the Northern Provincial team and the team won the 1st place. P.Vishnu won the 3rdPlace in National level in All Island School Boxing Tournament in 17-18 Age group. P.Vishnu won the 2nd Place in National level in Sri Lanka School Boxing Association in 17-18 Age group. T.Abishanth won the Gold medal in Discus Throw in Junior National Athletic Championship in Under 16. B.Ananth won the silver medal in Discus Throw in Junior National Athletic Championship in Under 16 |
Compiled by
Mr.N.Gunaseelan
Former Deputy Principal of the College and
Mrs.B.Linashkumar
Staff of the College.