20.10.2019-21.10.2019 கண்காட்சி

ஹாட்லிக் கல்லூரியின் வரலாற்றில் அனைத்துத்துறைகளையும் ஒருங்கிணைத்த மாபெரும்  கல்விக் கண்காட்சி 20.10.2019, 21.10.2019 ஆகிய இரு தினங்களிலும் நிகழ்ந்தது. வடமராட்சி வலயக் கல்விப்பணிப்பாளர் திரு.யோ.ரவீந்திரன் அவர்கள் முதன்மை அதிதியாகக் கலந்து ஆரம்பித்து வைத்தார். 20.10.2019 அன்று பொதுமக்களும் பெற்றோரும் 21.10.2019 அன்று ஏனைய பாடசாலை மாணவர்களும் கண்காட்சியினைப் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.


        எலும்புக்கூடுநடனம், கப்பற்காட்சி, நீரடி நகரான அட்லாண்டிஸ், தொங்குபாலம் , மண்ணின்றிய பயிர்ச்செய்கை, அறிவியற் தொழினுட்பக்  கண்டுபிடிப்புக்கள், வானோடிப்பாதை, இசைக்கச்சேரி, இந்துக்கொலுமுறை, கல்வாரிமலை, கணித நுட்பங்கள, தகவல்தொடர்பாடல் நுட்பங்கள், டைனோசர் நடனம், நிணக்கூழ், நீர்ப்பிசாசு பேய்வீடு, புராதன இலங்கையின் மாதிரி, நவீன நகராக்கம் போன்ற எண்ணற்ற புதுமையான ஆக்கங்களின் அடுக்குகள் குவிந்ததாக காட்சியினை ஆசிரியர்களும் மாணவர்களும் இணைந்து முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  


 

19.10.2019 வருடாந்த பரிசில் தின விழா

ஹாட்லிக் கல்லூரியின் வருடாந்த பரிசில் தின விழா கல்லூரியின் ஓன்றுகூடல் அரங்கிலே இனிதே நடைபெற்றது. வடமாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் திரு- பிறேமகாந்தன கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்தார். பன்முகத்துறைகளில் சாதனை படைத்த மாணவர்கள் பரிசில் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். கலை நிகழ்வுகளும் சிறப்புற நடைபெற்றன.

 

11.10.2019  திறன் வகுப்பறை திறப்பு

ஹாட்லிக் கல்லூரியின் வகுப்பறை மேம்பாட்டுச் செயற்றிட்டத்தின் நகர்விலே தரம் 06 E தரம் 06 A வகுப்பறைகள் திறன்விருத்தி வகுப்பறைகளாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன. மு.ப 10.30 மணியளவில் முதன்மை அதிதியான திரு சிவஞானசோதி (செயலாளர் - மீள்குடியேற்ற அமைச்சு) அவர்களால் தரம் 06 E  திறன் வகுப்பறை திறந்து வைக்கப்பட்டது. பி.ப 12.30 அளவில் நடைபெற்ற பிறிதொரு நிகழ்விலே “வேலும் மயிலும் Foundation” ஸ்தாபகர் திரு.தயானந்தராஜா அவர்கள் முதன்மை அதிதியாகக் கலந்து கொண்டு தரம் 06 A  திறன் வகுப்பறையினைத் திறந்து வைத்தார்.

08.10.2019     வாணி விழா

ஆயகலைகளின் அன்னையான சக்தியின் வடிவங்களைப் போற்றும் வகையிலும், தூய நோன்பினைக் கடைப்பிடித்து ஈடேறும் நோக்கிலும் முன்னெடுக்கப்பட்ட நவராத்திரி நிகழ்வின் இறுதிநாள் விழாவான “வாணிவிழா” கல்லூரியின் ஒன்றுகூடல் அரங்கிலே சிறப்புற நிகழ்ந்தேறியது. கல்லூரியின் அன்றையநாள் பகுதித்தலைவரான திரு.ஆ.மகேந்திரராஜா அவர்கள் முதன்மை அதிதியாக கலந்து சிறப்பித்தார். கல்லூரியின் முதல்வர் இணை முதல்வர் என்போரின் உரைகளும் கலைநிகழ்வுகளும் இனிதே இடம்பெற்றன.

 

07.10.2019    ஆசிரியர் தினம்

கல்வி ஒளியேற்றும் ஆசிரியர்களின் கீர்த்தியினை கொண்டாடும் வகையிலே ஹாட்லிக் கல்லூரியின் ஒன்றுகூடல் அரங்கில் மாணவர்களால் ஆசிரியர் தினம் முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வின் முதன்மை அதிதியாக ஓய்வுநிலை நூலகரும் ஆசிரியருமான திரு.பா.இரகுபரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். பழைய மாணவர் சங்கப் பிரதிநிதிகள், பாடசாலை அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகள், பெற்றோர்கள் வருகை தந்து நிகழ்வினைப் பெருமைப்படுத்தினர். மாணவர்கள் ஆசிரியர்களின் கலைநிகழ்வுகளும் அதனைத் தொடர்ந்து கல்Âரி விளையாட்டுத்திடலில் ஆசிரியர்களிடையேயான உறியடிப்போட்டி, மெதுவான ஈருருளி ஓட்டம், கயிறு இழுத்தல, சங்கீத கதிரை நிகழ்வு என்பன சிறப்புற நிகழ்ந்தன. 

2019.10.01 - சின்னம் சூட்டும் நிகழ்வு

01.10.2019 கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற வாராந்த ஒன்று கூடலில் கனிஷ்ட மாணவ தலைவர்களுக்கு சின்னஞ்சூட்டும் நிகழ்வு சிறப்பாக நிகழ்ந்தேறியது. கல்லூhயின் முதல்வர் திரு.த.முகுந்தன் அவர்கள் கனிஷ்ட மாணவ தலைவர்களுக்குச் சின்னஞ்சூட்டி மதிப்புரையினையும் வாழ்த்துரையினையும் வழங்கினார்.

இந் நாளின் விசேட நிகழ்வாக சிறுவர்தினம் கொண்டாடப்பட்டது. சிறுவர் தினத்தை நடுவணாக் கொண்டு மாணவர்தலைவர், ஆசிரியர், முதல்வர் என என்போர் சிறப்புரைகளை ஆற்றினர். 

 

2019.09.17 - சின்னம் சூட்டும் நிகழ்வு

17.09.2019 கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற வாராந்த ஒன்று கூடலில் சிரேஷ்ட மாணவ தலைவாகளுக்கு சின்னஞ்சூட்டும் நிகழ்வு  சிறப்பாக நிகழ்ந்தேறியது. கல்லூரியின் முதல்வர் திரு.த. முகுந்தன் அவர்கள் சிரேஷ்ட மாணவர் தலைவர்களுக்குச் சின்னஞ்சூட்டி மதிப்புரையும் வாழ்த்துரையும் வழங்கினார்

 

2019.09.11 - பிரியாவிடை

11.09.2019 அன்று எம் கல்லூhயில் தொடர்சேவையினை முன்னெடுத்த நாடகமும் அரங்கியலும் கற்கைநெறியின் ஆசிரியரும், முதன்மை நூலகருமான திரு.பா.இரகுவரன் அவர்களது சேவை நலனைப் பாராட்டும் வகையிலான பிரியாவிடை நிகழ்வு இனிதே நடைபெற்றது.

 

2019.09.11 - மின்னூலகம்

11.09.2019 அன்று ஹாட்லிக்கல்லூரியில் மின்னூலகம் ஆரம்பித்துவைக்கப்பட்டது. இந்நிகழ்விலே முதன்மை விருந்தினராக கலந்து கொண்ட ஹாட்லியின் பிரதான நூலகரும் ஆசிரியருமான திரு.பா.இரகுவரன் அவர்கள் மின்னூலகத்திற்கான  கால்கோள் நிலைச் செயற்றிட்டத்தினை தொடங்கி வைத்தார். கனடா மற்றும் ஐக்கிய இராச்சிய ஹாட்லிக் கல்லூரி பழைய மாணவர்களால் மின்னூலகத்திற்கு வழங்கப்பட்ட 10 வில்லைக் கணினிகளை பிரதிநிதிகளில் ஒருவரான திரு.தரணி அவர்கள் கல்லூரி முதல்வரிடம் கையளித்தார்.

 

2019.09.11 - தொடர்பாடல் மற்றும் தலைமைத்துவத் திறன்களுக்கான கழகம்

11.09.2019 அன்று ஹாட்லிக் கல்லூரியில் “தொடர்பாடல் மற்றும் தலைமைத்துவத் திறன்களுக்கான கழகம்” ஆரம்பித்து வைக்கப்பட்டது.கால்கோள் நிகழ்விலே கல்லூரி முதல்வர் மற்றும் வளவாளர்களாகக் கலந்து கொண்ட திரு.தரணி, சட்டத்தரணியான திரு.த. ரஜீவன் என்போர் கருத்துரைகளை வழங்கி மாணவர்களை நெறிப்படுத்தினர்.

 

2019.09.09 - தொழில் நுட்ப பீட திறப்புவிழா

09.09.2019 அன்று கௌரவ நாடாளு மன்ற உறுப்பினர் எம் ஏ.சுமந்திரன் அவர்களால் தொழில்நுட்ப பீடம் திறந்து வைக்கப்பட்டது.

 

2019.09.04 - பிரியாவிடை

04.09.2019 அன்று எம் கல்லூரியில்  பதினெட்டு வருடங்கள் தொடர் சேவையாற்றி பணிநிலை ஓய்வு பெற்றுச் செல்லும் கணித பாட ஆசிரியரும் பகுதி தலைவருமான திரு.ம.மகேந்திரராஜா அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு நடைபெற்;றது.

09-07-2019 ஒன்று கூடல் நிகழ்வு


செவ்வாய்க்கிழமை தோறும் நிகழ்கின்ற ஒன்று கூடல் நிகழ்வானது நாட்டில் நிலவிய அசாதாரண சூழலால் தற்காலிகமாக தவிர்க்கப்பட்டிருந்தது இன்றைய தினம் மீண்டும் இரண்டாம் தவணைக்கான முதலாம் நிகழ்வு கல்லூரியின் ஒன்று கூடல் மண்டபத்தில்  நிகழ்ந்தேறியது. அதிபரின் தலைமையுரை ஆசிரியர் மற்றும் மாணவரின் சிறப்புரையோடு மாகாணமட்டத் தடகளப் போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில் வழங்கல் நிகழ்வும் சிறப்புற நடைபெற்றது.

 

மாகாணநிலைத் தமிழ்தினப் போட்டிகள்


06-07-2019அன்று யா/வேம்படிமகளிர் கல்லூரியில் மாகாணமட்டதமிழ்தினப் போட்டியில் குழு இசைபிரிவு இரண்டிலும், பாவோதல் பிரிவு இரண்டிலும்  (செல்வன் பி.சரனிதன்) ஹாட்லிக்கல்லூரி முதலாமிடத்தினைப் பெற்றுள்ளது. மேலும் தனியிசை பிரிவு நான்கில் மூன்றாம் இடத்தினையும் (செல்வன் ம.ஆகாஷ்) பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

போதைப்பொருள் ஒழிப்புச் செயலமர்வு


05-07-2019 அன்று போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு விழிப்புணர்வுச் செயலமர்வு,  எமது கல்லூரியின் ஒன்றுகூடல் மண்டபத்தில்  நடைபெற்றது. இந்த நிகழ்வினை பருத்தித்துறைகாவல் துறையினரும், பிரதேசசெயலகமும், பொதுசுகாதார பரிசோதக சேவையினரும் இணைந்த முன்னெடுத்தனர் தொடர்ந்து வீதிப்போக்குவரத்து தொடர்பான காணொளியும் மாணவர்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டு விளக்கமளிக்கப்பட்டது

 

வடக்கு மாகாணப் பாடசாலைகளுக்கு இடையிலான தடகளநிகழ்வு


04-07-2019 தொடக்கம் 08-07-2019 வரை துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்ற பன்னிரண்டாவது வடக்குமாகாணப் பாடசாலைகளுக்கு இடையிலான தடகளப்போட்டி நிகழ்ந்தேறியது. கவனக்குவிப்பிற்குள்ளான இப் போட்டியில்   ஹாட்லிக்கலலூரி 5 தங்கப்பதக்கம், 4 வெள்ளிப்பதக்கம், 7 வெண்கலப்பதக்கம் எனத் தன்வசப்படுத்தி தனித்துவ வாகைசூடியுள்ளது. மேலும் 2 நான்காம் இடத்தினையும் ஒருஐந்தாம் இடத்தினையும் 2 ஆறாம் இடத்தினையும் தட்டிச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது    
தங்கசாதனையாளர்கள்


1.செல்வன். S.மிதுன்ராஜ்

(குண்டுபோடுதல்,தட்டெறிதல்,ஈட்டியெறிதல்)

2.செல்வன். T. சுஜிஸ்ரன்  (குண்டுபோடுதல்)

3.செல்வன். V.சானுஜன் (தட்டெறிதல்)

 

விறுவிறுப்பானவெற்றிகள் குவிக்கப்பட்ட இந்தநிகழ்வில் 14 வயது ஆடவர் பிரிவிலே ஹாட்லிக்கல்லூரி மாகாணவாகையாளியாகத் (Provincial Champion) தெரிவானது

 

2019.07.10/11/12 வலய மட்ட பொது தகவல் தொழினுட்பவியல் நிகழ்நிலை செயன்முறைப் பரீட்சை

வடமராட்சி கல்வி வலய கணினி வள நிலையம் நடாத்திய  க.பொ.த உயர் தர (2020) மாணவர்களுக்கான பொது தகவல் தொழினுட்பவியல் நிகழ்நிலை செயன்முறைப் பரீட்சை எமது கல்லூரியின் கணினி ஆய்வுகூடத்தில் 2019.07.10, 2019.07.11, 2019.07.12 ஆகிய தினங்களில்  நடைபெற்றது. இப் பரீட்சைக்கு எமது கல்லூரியின் 161 மாணவர்கள் தோற்றினார்கள்.

 

2019.06.29/30 மாகாண மட்ட தகவல் தொடர்பாடல் தொழினுட்பவியல் போட்டிகள்

வட மாகாணக் கல்வித் திணைக்களத்துடன் இணைந்து Yarl IT Hub நிறுவனம் நடாத்திய Yarl Geek Challenge season 8 - Junior இறுதிப்போட்டியில் IOT Hardware Application Development பிரிவில் எமது கல்லூரி சார்பாக பங்குபற்றிய Hartley Smart அணியினர் (தரம் 12 மாணவர்கள் செல்வன் ர.ரஜிந்தன், செல்வன் சி.சன்சயன், செல்வன் உ.ஜனனன்) வடிவமைத்த எமது வீடுகளை சூட்டிகை தொலைபேசி மூலமாக கட்டுப்படுத்தும் திறனகம் (Smart Home) முறைமையானது  மாகாண மட்டத்தில் முதலாம் இடத்தினை பெற்றுள்ளது.

 

2019.06.21/24/25/26 வலய மட்ட தகவல் தொடர்பாடல் தொழினுட்பவியல் போட்டிகள்

வடமராட்சி கல்வி வலயம் நடாத்திய தரம் 6 தொடக்கம் 13 வரையான மாணவர்களுக்கு 16 பிரிவுகளில் இடம்பெற்ற தகவல் தொடர்பாடல் தொழினுட்பவியல் இறுதிப்போட்டிகளில் எமது கல்லூரி சார்பாகப் பங்குபற்றிய அணிகளில் 8 அணிகள் முதலாம் இடத்தினையும் 2 அணிகள் இரண்டாம் இடத்தினையும் 4 அணிகள் மூன்றாம் இடத்தினையும் பெற்றுள்ளன.

தகவல் தொடர்பாடல் தொழினுட்பவியல் வினாடிவினா (ICT Quiz) போட்டியில் தரம் 6 முதலாம் இடத்தினையும் தரம் 7 முதலாம் இடத்தினையும் தரம் 8 இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தினையும் பெற்றுள்ளது.

இலத்திரனியல் நிகழ்த்துகை (Presentation) போட்டியில் தரம் 7 இரண்டாம் இடத்தினையும் தரம் 8 மூன்றாம் இடத்தினையும் தரம் 9 மூன்றாம் இடத்தினையும் பெற்றுள்ளது.

செய்நிரலாக்கம் (Scratch Programming) போட்டியில் தரம் 6 முதலாம் இடத்தினையும் தரம் 7 மூன்றாம் இடத்தினையும் தரம் 8 முதலாம் இடத்தினையும் தரம் 9 மூன்றாம் இடத்தினையும் பெற்றுள்ளது.

பொருட்களின் இணையம் (Internet of Things) போட்டியில் தரம் 9 முதலாம் இடத்தினையும் தரம் 12 முதலாம் இடத்தினையும் பெற்றுள்ளது.

இணையத்தள வடிவமைப்பு (Web Development) போட்டியில் தரம் 11 முதலாம் இடத்தினையும் தரம் 13 முதலாம் மற்றும் இரண்டாம் இடத்தினையும் பெற்றுள்ளது.

முழுமையான பெறுபேறுகள் மற்றும் பெயர் விபரங்களுக்கு

https://drive.google.com/file/d/1gF_YFHp_-BKdPN6D1JwAqyk2iMLfV4uV/view

 

2019.07.02 - அகில இலங்கை கர்நாடக இசைப் போட்டி

2019.07.02 அன்று வடமராட்சி வலயத்தில் நிகழ்ந்த அகில இலங்கை கர்நாடக இசைப் போட்டியில் நாட்டார் பாடல், தத்துவப்பாடல், வாத்திய இசை ஆகிய மூன்று பிரிவிலும் எமது கலலூரி மாணவர்கள் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளனர்.

 

2019.07.01 - உடற்பயிற்சி செயற்றிட்டம் மீண்டும் அமுல்

இன்று முதல் எமது கல்லூரியில், நாட்டில் நிலவிய அசாதரண சூழலால் தற்காலிகமாகத் தவிர்க்கப்பட்டிருந்த மாணவர்களுக்கான காலை நேர உடற்பயிற்சிச் செயற்றிட்டம் மீளவும் நடைமுறைப்படுத்தப்பட்டது. மாணவர்கள் புத்துணர்வோடும் மனமகிழ்வோடும் உடற்பயிற்சியில் ஈடுபட்டனர்.

 

2019.06.29 - மாகாணமட்ட மேசைப்பந்தாட்டம்

2019.06.29 அன்று யாழ் மத்திய கல்லூரியில் இடம்பெற்ற மாகாணமட்ட மேசைப் பந்தாட்டப் போட்டியில் எமது கல்லூரியின் 20 வயதுக்குட்பட்ட அணி நான்காம் இடத்தைப் பெற்றுள்ளது.

 

2019.06.17/18/19 - மாகாணமட்ட உதைபந்தாட்டம்

2019.06.17, 2019.06.18, 2019.06.19 ஆகிய தினங்களில்  மன்னார் அடம்பன் பிரதேச சபை மைதானத்தில்  இடம்பெற்ற மாகாணமட்ட உதைபந்தாட்டப் போட்டியில் எமது கல்லூரியின் 16 வயதுக்குட்பட்ட அணி நான்காம் இடத்தைப் பெற்றுள்ளது.

 

2019.06.12 - தொழினுட்ப பீட ஆய்வுகூட புதிய கட்டட  நுழைவு விழா

கல்லூரியின் தொழினுட்ப ஆய்வுகூட புதிய கட்டட நுழைவு விழாவிற்கான பொங்கலும் பால் காய்ச்சும்  நிகழ்வும் இன்று இடம்பெற்றன. அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து சிறப்பித்திருந்தனர்.

 

 

2019.06.01/02 - மாகாணமட்ட சதுரங்கப் போட்டி

2019.06.01 2019.06.02 ஆகிய தினங்களில் கொக்குவில் இந்துக் கல்லூரியில் இடம்பெற்ற மாகாணமட்ட சதுரங்கப் போட்டியில் எமது கல்லூரியின் 17 வயதுக்குட்பட்ட அணி இரண்டாம் இடத்தினையும், 20 வயதுக்குட்பட்ட அணி  முதல் இடத்தினையும் பெற்றுள்ளன.

மீநிலைப் பரிசு(Board Prize) செல்வன் நிலுக்சன்

 

 

 

 

 

 

 

 

Joomla templates by a4joomla